பாடகி நித்யஸ்ரீயின் கணவர் தற்கொலை;நித்யஸ்ரீயும் தற்கொலை முயற்சி?

20.12.12


பிரபல கர்நாடக பாடகி நித்யஸ்ரீ யின் கணவர் மகாதேவன் சென்னை கோட்டூர்புரம் அருகே உள்ள அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரது உடலை தீயணைப்பு படையினர் மீட்டுள்ளனர். பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இன்று பகல் 12.45 மணி அளவில் தனது காரில் வந்து கோட்டூர்புரம் அருகே உள்ள அடையாற்றின் பாலத்தில் நிறுத்திவிட்டு, ஆற்றில் குதித்துள்ளார். திடீரென ஒருவர் காரை நிறுத்திவிட்டு ஆற்றில் குதித்ததை பார்த்தவர்கள், இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர், ஆற்றில் குதித்து சுமார் ஒரு மணி நேர தேடுதலுக்கு பின்னர் அவரது உடலை மீட்டனர். இன்று காலை ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாகவே மகாதேவன், கோபத்துடன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. நித்யஸ்ரீயும் தற்கொலை முயற்சி? இதனிடையே கணவர் இறந்தது குறித்து தகவலறிந்த பாடகி நித்யஸ்ரீயும், தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது உடல் நிலை குறித்த விவரம் உடனடியாக தெரியவரவில்லை. பாடகி நித்யஸ்ரீ, மறைந்த பிரபல கர்நாடக பாடகி பட்டம்மாளின் பேத்தி ஆவார். நித்யஸ்ரீயும் தற்கொலைக்கு முயற்சித்ததால் கர்நாடக இசையுலகம் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது. பிரபல கர்நாடக இசைப்பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் கணவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்து நித்யஸ்ரீயும் தற்கொலைக்கு முயற்சித்ததால் கர்நாடக இசையுலகம் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது. பிரபல பின்னணிப் பாடகி டி.கே. பட்டம்மாளின் பேத்தி நித்யஸ்ரீ மகாதேவன். கர்நாடக இசைப் பாடகியான இவர் பெரும்பாலான திரைப்படங்களில் பின்னணி பாடியுள்ளார். இவரது கணவர் மகாதேவன் இன்று காலையில் சென்னை கோட்டூர்புரம் பாலத்தில் காரில் சென்று ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் கூறியுள்ளனர்.. இன்று காலை மகாதேவன் ஒரு சொகுசுக் காரில் கோட்டூர்புரம் சென்றதாகவும். அங்கு பாலத்தில் வண்டியைநிறுத்தி விட்டு அடையாறு ஆற்றில் குதித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனைப் பார்த்த சாலையில் சென்றோர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அவர்கள் தீயணைப்புப் படையினருடன் விரைந்து சென்று நீண்ட நேர முயற்சிக்குப் பின்னர் இறந்த உடலை மீட்டனர். அவரது உடலை சோதனை செய்ததில் அவர் பின்னணிப் பாடகி நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன் என்று தெரியவந்தது. அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.

0 கருத்துக்கள் :