பாலியல் தொழிலை உங்கள் வீடுகளிலிருந்து ஆரம்பியுங்கள்

28.12.12

பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்க கோருவோர் அதனை தமது வீட்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டுமென ஜே.வி.பி. யின் தென்மாகாண சபை உறுப்பினரான கலின் ஹேவகே தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தென்மாகாண சபை உறுப்பினரொருவர் முன்வைத்த இவ்விடயம் தொடர்பான கருத்துக்கு பதிலளிக்கும் முகமாகவே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்த சிலர் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்கும் படி வேண்டுகோள் விடுக்கின்றனர். இதுவா நீங்கள் பெற்ற அனுபவம் மற்றும் பயிற்சி என்று நாம் கேட்கின்றோம். இது சரியென்று நினைத்தால் பரவாயில்லை அதை நீங்கள் உங்கள் வீடுகளிலிருந்து ஆரம்பியுங்கள்.

0 கருத்துக்கள் :