தமிழ் நாட்டில் மேலோங்கியுள்ள புலிகளின் கை : சிங்கள புலனாய்வு

30.12.12


தமிழ் நாட்டில் உள்ள சில அரசியல் தலைவர்களால், விடுதலைப் புலிகளுக்கும் மீண்டும் ஆதரவு பெருகிவருவதாக, சிங்கள புலனாய்வுத் துறையினர் தமிழ் நாட்டில் உள்ள கியூப் பிரிவு பொலிசாருக்கு தெரிவித்துள்ளார்கள் என்ற செய்தி கசிந்துள்ளது. சமீபகாலமாக தமிழ் நாட்டில் உள்ள சில தலைவர் முன்னெப்போழுதும் இல்லாதவாறு, விடுதலைப் புலிகளை ஆதரிப்பதாகவும், மற்றும் தமிழ் நாட்டில் இளையோர் படைப் பிரிவு என்னும் அமைப்பை நிறுவவும் சிலர் பாடுபடுவதாகவும் சிங்கள புலனாய்வுத்துறை மேலும் தெரிவித்துள்ளது. சமீபத்தில் இந்தியாவில் இருந்து இலங்கை சென்ற, 2 இளைஞர்களை விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்த இலங்கை குற்றப்புலனாய்வுப் பொலிசார், இவர்கள் தெரிவித்த சில விடையங்களையே தமிழ் நாட்டுப் பொலிசாருடன் பகிர்ந்துகொண்டுள்ளனர் எனவும் சொல்லப்படுகிறது. இதற்கு அமைவாகவே கடந்த வாரம் சில கைதுகள் இடம்பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். தமிழ் நாட்டில், உணர்வாளர் சீமான் அவர்கள், மு.க.ஸ்டாலின், பழ.நெடுமாறன் ஐயா, வைகோ, மற்றும் மேலும் சிலரால், தனி ஈழக் கோற்பாடு வலுப்பெற்று வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று மேலும் கருத்து தெரிவித்துள்ளது. சமீபத்தில் கலைஞர் கருணாநிதி அவர்களால் கூட்டப்பட்ட டெசோ மாநாட்டிற்குப் பின்னதாக, அதனை எதிர்த்தும் ஆதரித்தும் பல ஈழத் தமிழர் மாநாடுகள் நடைபெறுவிட்டதாகவும். இவையே புலிகள் இயக்கத்துக்கு மீண்டும் புத்துணர்வு கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது என்றும் அச்சிங்கள ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது, குறிப்பிடத்தக்க விடையமாகும்.

0 கருத்துக்கள் :