யாழ்.பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்! வவுனியாவில் மக்கள் முழக்கம்

14.12.12

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தி தமிழ்தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் வவுனியாவில் கண்டன ஆர்ப்பாட்டம் சற்றுமுன்னர் ஆரம்மிக்கப்பட்டுள்ளது.
தமிழ்தேசியக் கூட்மைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையில் ஆரம்பமாகியுள்ள இந்த போராட்டத்தில் கூட்டமைப்பு சார்பாக மாவை சேனாதிராசா,சிறீதரன்,செல்வம் அடைக்கலநாதன்,சிவசக்கி ஆனந்தன்,ஆகியோரும்,தமிழ்தேசிய மக்கள் முன்னணி சார்பாக கஜேந்திரகுமார்,கஜேந்திரன் ஆகியோரும்,புளொட் சித்தார்த்தன்,தமிழர் விடுதலைக்  கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி,ஜனநாயக மக்கள்முன்னணியின் பாஸ்கரா,புதிய மாக்ஸிச லெனினிய கட்சியின் செந்தி வேல் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில், “கைதான மாணவர்களை உடனே விடுதலை செய்”,“நிலத்தை ஆக்கிரமிக்காதே”, “மத முரண்பாட்டை தோற்றுவிக்காதே” என்று அரசுக்கு எதிராக கோசங்கள் எழுப்பியவாறு பெரும் திரளான மக்களும் கலந்துகொண்டுள்ளனர்.
  

0 கருத்துக்கள் :