நடிகை குஷ்புவுக்கு எதிராக போராட்டம்

12.12.12

இந்து மக்கள் கட்சி சென்னை மண்டல தலைவர் முத்து ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பததாவது:- நடிகை குஷ்பு கடவுள்களை தொடர்ந்து அவமதித்து வருகிறார். ஐதராபாத்தில் நடந்த தெலுங்கு பட விழா ஒன்றில் இந்துக் கடவுள் படங்கள் அச்சிட்ட சேலை அணிந்து பங்கேற்று உள்ளார். அவரது சேலை பார்டரில் பிரம்மச்சாரியான ஆஞ்சநேயர், யோகங்களின் தலைவர் கிருஷ்ணர், ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவத்தை போதித்த ராமர் போன்ற இந்து கடவுள் படங்கள் உள்ளன. அதை மார்பில் போர்த்திக் கொண்டு விழாவில் பங்கேற்று உள்ளார். இது இந்துக் கடவுள்களை அவமதிப்பது ஆகும். இந்த குற்றத்தை அவர் தெரியாமல் செய்து இருந்தால் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். தெரிந்தே செய்து இருந்தால் குஷ்புக்கு எதிராக போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதன்படி நாகர்கோவில் வடசேரி சந்திப்பில் இன்று இந்து முன்னணி சார்பில் நடிகை குஷ்புவுக்கு எதிராக கண்டன போராட்டம் நடந்தது. இதற்கு நகரத்தலைவர் ராஜா தலைமை தாங்கினார். அவர்கள் குஷ்புவின் உருவப்படம் பொறித்த டிஜிட்டல் போர்டை அடித்து அவமரியாதை செய்து கோஷமிட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

0 கருத்துக்கள் :