கொழும்பு சனத்தொகையில் தமிழ் பேசும் மக்களே அதிகம்

11.12.12

சிறீலங்காவின் தலைநகரான கொழும்பு நகரின் மக்கள் சனத்தொகைப் பரம்பலில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

1971ம் ஆண்டு கொழும்பு நகரில் 50 வீதமான சிங்கள மக்கள் வாழ்ந்து வந்தாகவும், தற்போது 2012ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 24 வீதமாக மாறியுள்ளதாகவும்

2012ம் ஆண்டு குடிசன மதிப்பீட்டு புள்ளி விபரத் தகவல்களின் அடிப்படையில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் சனத் தொகைப் பரம்பல் உயர்வடைந்துள்ளது.

குறிப்பாக 1971ம் ஆண்டில் 19 வீதம் வாழ்ந்து வந்த முஸ்லிம் மக்களின் தொகை தற்போது 40 ஆக உயர்வடைந்தள்ளது.

1971ம் ஆண்டு 24.5 வீதமாக வாழ்ந்து வந்த தமிழ் மக்களின் சனத்;தொகைப் பரம்பல் தற்போது 33 வீதமாக உயர்வடைந்துள்ளது.

தற்போது கொழும்பு நகரில் 79468 சிங்கள மக்களும், 106325 தமிழ் மக்களும், 126345 முஸ்லிம் மக்களும் வாழ்ந்து வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துக்கள் :