தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 6 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று

14.12.12

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 6 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்

         தத்துவ சொல்லாலே வார்த்தைகள் பேசி
               உத்தமன் நீ தாய் மண் விடிவுக்காய்
        சத்தியம் செய்து சளைக்காமல் நின்று
              பெரும் பாடு பட்டாய் ஈழம் பிறக்க
        பூவை போன்று உன் புன்னகை உன் வீரம்
               தாவி அனைத்து தாய் மண் வளர்த்தாளே
        அன்பால் எம்மை உன்பால் ஈர்த்தவனே
               தம்பியோடு நின்று சாதனை படைத்தவனே
       பாதி வழியில் உன் பயணத்தை நிறுத்த
               எம் விதியை நினத்து தவித்தோம் அண்ணா
       எனினும் விதி என்று நாம் அழமாட்டோம்
               வென்றெடுப்போம் ஈழத்தை உன் நினைவில்.

பாலாண்ணை தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு - தேசியத் தலைவர் 
தீவிரம்பெற்றுள்ள எமது விடுதலைப்போருக்கு அவர் நிறையப் பணிகளை ஆற்றவேண்டியிருக்கின்ற தருணத்தில் அவருக்கு மரணம் சம்பவித்திருக்கிறது. இதனை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை என தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் பாலா அண்ணரின் இழப்பு குறித்து தனது அறிக்கையில் 14.12.2006 அன்று தெரிவித்திருந்தார். இன்று பாலா அண்ணரின் 6 ம் ஆண்டு நினைவுகள் சுமந்து நிற்கும் இவ்வேளையில் அவ்வறிக்கையை மீள இங்கு பிரசுரிக்கின்றோம்.

0 கருத்துக்கள் :