வடக்கில் தொடர்ந்து கொட்டும் மழை. 30 ஆயிரம் மக்கள் பாதிப்பு

28.12.12


வடக்கில் தொடர்ந்து கொட்டிவரும் மழையினால், வடமாகாணத்தில மட்டும் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. கடந்த ஒருவாரத்துக்கும் மேலாக சிறிலங்காவின் பல்வேறு பகுதிகளிலும் மழைகொட்டி வருகிறது. இதனால், குளங்கள் பல நிரம்பி வழிவதுடன், பல இடங்களில் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு என்பன ஏற்பட்டுள்ளன. இந்த இயற்கை அனர்தத்தினால் சுமார் 50 பேர் வரை இதுவரை மரணமாகியுள்ளனர். இந்தநிலையில், கடந்த சிலநாட்களாக வடமாகாணத்தில் கடும் மழை கொட்டி வருகிறது. இதனால், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் 9515 குடும்பங்களைச் சேர்ந்த 30,714 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா மாவட்டத்தில் 4550 குடும்பங்களை சேர்ந்த 15,891 பேரும், மன்னார் மாவட்டத்தில் 2680 குடும்பங்களை சேர்ந்த 7,274 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 706 குடும்பங்களை சேர்ந்த 2525 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 1579 குடும்பங்களை சேர்ந்த 5024 பேரும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தினால் இடம்பெயர்ந்துள்ள மக்களைத் தங்கவைப்பதற்காக வவுனியாவில் 42 முகாம்களும், மன்னாரில் 12 முகாம்களும் கிளிநொச்சியில் 2 முகாம்களும்

0 கருத்துக்கள் :