ஓயாத அலைகள் - 3 நடவடிக்கையி​ல் காவியமான 10 மாவீரர்களி​ன் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்று

12.12.12

12.12.1999 அன்று ஒயாத அலைகள் - 3 நடவடிக்கையின்போது பூநகரி, இயக்கச்சி, வடமராட்சி ஒல்லன்காடு மற்றும் வெற்றிலைக்கேணி ஆகிய பகுதிகளில் 10 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். பூநகரிப் பகுதியில்,
வீரவேங்கை வர்ணன் (விக்கினேஸ்வரன் அஜந்தன் - யோகபுரம், மல்லாவி, முல்லைத்தீவு) என்ற போராளியும்,
இயக்கச்சிப் பகுதியில் இடம்பெற்ற சமரில், லெப்டினன்ட் பாணன் (நாதன்) (சன்னாசி நாகராசா - வட்டக்கச்சி,
கிளிநொச்சி) என்ற போராளியும்,
வடமராட்சி ஒல்லன்காடு பகுதியில் இடம்பெற்ற சமரில்,
லெப்.கேணல் குமணன் (சாள்ஸ்) (கந்தையா சிவனேஸ்வரநாதன் - கோவில்புளியங்குளம், வவுனியா)
லெப்டினன்ட் இசையழகன் (நவரத்தினராசா நவநீதன் - செல்வபுரம், வவுனியா)
வீரவேங்கை இன்பன் (பாரதி) (குலசேகரம் குகன் - நுணாவில், யாழ்ப்பாணம்)
வீரவேங்கை புனிதன் (துமிலன்) (நாகரத்தினம் கஜன் - நீர்வேலி, யாழ்ப்பாணம்)
ஆகிய போராளிகளும்
மேஜர் மதன் (ரவியப்பா) (முனியாண்டி மதியழகன் முள்ளிக்கண்டல்,மன்னார்) கப்டன் கர்ணன் (திண்ணன்) (பாலசுப்பிரமணியம் பிரதீபன் - கொல்லங்கலட்டி, யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் புதியவள் (தெய்வேந்திரம் சிவராஜினி - மல்லாகம், யாழ்ப்பாணம்)
வீரவேங்கை சுடர்வள்ளி (நிலாஜினி) (இராசரத்தினம் சுகந்தினி - கல்வயல்,யாழ்ப்பாணம்) ஆகியோரும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
  
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம். 
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த அனைத்து போராளிகளையும் இன்நாளில் நினவுகூருகிறோம்

0 கருத்துக்கள் :