யாழ். மாவட்டத் தளபதி லெப்.கேணல் மதியின் 24ம் ஆண்டு நினைவு நாள்

10.12.12

திருநெல்வேலிப் பகுதியில் இந்தியப் படையினரின் சுற்றிவளைப்பின்போது தன்னைத்தானே சுட்டு வீரச்சாவைத் தழுவிக் கொண்ட யாழ். மாவட்டத் தளபதி லெப்.கேணல் மதியின் 24ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
10.12.1988 அன்று யாழ். திருநெல்வேலிப் பகுதியில் இந்தியப் படையினர் மற்றும் தேசவிரோதிகளால் சுற்றிவளைக்கப்பட்டபோது தன்னைத்தானே சுட்டு யாழ்.மாவட்டத் தளபதி லெப்.கேணல் மதி (சுப்பிரமணியம் பாலச்சந்திரன் – மல்லாகம், யாழ்ப்பாணம்)
என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
 தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தனது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவனை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த அனைத்து போராளிகளையும் இன்நாளில் நினவுகூருகிறோம்.

0 கருத்துக்கள் :