20 குழந்தைகள் உட்பட 26 பேர் பலி! தனது தாயாரையும் விடவில்லை அந்த கொடூரன்

15.12.12

அமெரிக்காவில் கனெக்டிகட் நகரில் சான்டி ஹுக் தொடக்கப்பள்ளி உள்ளது. அங்கு 14.12.2012 வெள்ளிக்கிழமை நுழைந்த ஒரு இளைஞர், அப்பள்ளியில் உள்ள மழலையர் வகுப்புக்குள் புகுந்து சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினான். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவன் சுட்டுக்கொல்லப்பட்டான். இந்த துப்பாக்கி சூட்டில் 18 குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் 2 குழந்தைகள் மருத்துவமனைக்கு போகும் வழியில் உயிரிழந்தனர். 6 ஊழியர்களும் உயிரிழந்தனர். மேலும் இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அந்த நபர் நியூஜெர்சியைச் சேர்ந்த ரியான் லான்சர் என்று தெரியவந்துள்ளது. ரியான் லான்சர் தாயார் அதே பள்ளியில் பணிபுரிந்து வந்தது தெரியவந்துள்ளது. அவரை பார்க்க வந்தபோது இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை அவன் நிகழ்த்தியுள்ளான். ரியான் லான்சர் தனது தாயாரும் சுட்டுக்கொன்றுள்ளான். இந்த சம்பவம் அமெரிக்காவில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கி சூடு சம்பவத்தையடுத்து அமெரிக்க அதிபர் ஓபாமா விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தற்போதுள்ள நிகழந்துள்ள சம்பவம் மிகவும் மோசமானது. உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லை. குழந்தைகள் பலியான சம்பவம் தனது இதயத்தை சுக்குநூறாக உடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

1 கருத்துக்கள் :

அவனுக்கு மிக மிக கடுமையான தண்டனையை வழங்க வேண்டும்....

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com/