லெப்.கேணல் சிவமோகன் உட்பட்ட 14 மாவீரர்களி​ன் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்று

13.12.12

ஓயாத அலைகள் - 3 நடவடிக்கையில் காவியமான லெப்.கேணல் சிவமோகன் உட்பட்ட 14 மாவீரர்களின் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
 13.12.1999 அன்று ஓயாத அலைகள் 3 தொடர் நடவடிக்கையின் போது யாழ். குடா மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின்போது 14 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
யாழ். மாவட்டம் கட்டைக்காடு பகுதியில் நடைபெற்ற சமரில்
லெப்.கேணல் சிவமோகன் (சதாசிவம் கிருபாகரன் - முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு)
கப்டன் ஈழத்தரசன் (முருகையா கேதீஸ்வரன் - பரவிப்பாஞ்சான், கிளிநொச்சி) லெப்டினன்ட் கவிகரன் (குணேஸ் ரவீந்திரன் - பெரியபோரதீவு, மட்டக்களப்பு) லெபடினன்ட் மலைமகன்/மலைமாறன் (அழகிப்போடி ஜெயா - நாவற்காடு, மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் அகிலநாதன் (வேல்முருகு சுபாநாயகன் - அம்பிலாந்துறை, மட்டக்களப்பு) ஆகிய போராளிளும்.
வெற்றிலைக்கேணிப் பகுதியில் நடைபெற்ற சமரில்.
கப்டன் பாவண்ணன் (கதிரவேற்பிள்ளை ஜெயகாந்தன் - வேலணை, யாழ்ப்பாணம்)
கப்டன் ஞானமதி (சரணானந்தம் கௌசிகா - கொக்குவில், யாழ்ப்பாணம்) வீரவேங்கை மாதவி (ஐயம்பிள்ளை விஜயராணி - புங்குடுதீவு, யாழ்ப்பாணம்) ஆகிய போராளிளும்.
தாளையடிப் பகுதியில் நடைபெற்ற சமரில் கப்டன்ஆராதனா(பாலசுப்பிரமணியம் சந்திரவதனி - பூநகரி, கிளிநொச்சி)
சிறப்பு எல்லைப்படை வீரர் கப்டன் குமணன் (சதாசிவம் மகா - மன்னம்பிட்டி, மட்டக்களப்பு)
சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் பெரியதம்பி (தங்கராசா தவராசா - மணலாறு)
சிறப்பு எல்லைப்படை வீரர் வீரவேங்கை சந்திரன் (பிள்ளையான் சந்திரன் - முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு) ஆகியோரும்.
கொம்படிப் பகுதியில் நடைபெற்ற சமரில் கப்டன் காஞ்சினி (சுப்பிரமணியம் அன்னலட்சுமி - கிரான், மட்டக்களப்பு)
ஒல்லன்காடு பகுதியில் நடைபெற்ற சமரில் 2ம் லெப்டினன்ட் நல்லமுதன் (அந்தோனி செல்வமாணிக்கம் - பரந்தன், கிளிநொச்சி)
மண்டலாய்ப் பகுதியில் நடைபெற்ற சமரில் லெப்டினன்ட் கோலமகன் (இராமச்சந்திரன் சசிக்குமார் - மதியாமடு, வவனியா) ஆகிய போராளியும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
தமிழீழ தாய் மண்ணின் விடியலக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம். 
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த அனைத்து போராளிகளையும் இன்நாளில் நினவுகூருகிறோம்

0 கருத்துக்கள் :