ரஜினி கமல் ரெடி என்றால் சம்பளமே வேண்டாம்! பாரதிராஜா அதிரடி!

14.11.12

கோ-வுட் ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கிற விஷயம் பண்ண தான் ரெடி என்று இயக்குநர் இமயம் சொல்லியிருக்கிறார். அதற்கான முடிவை தெரிந்துகொள்ள அவர் மட்டுமல்ல ரசிகர்களும் ஆர்வமாக காத்திருக்கின்றனர். சூப்பர் ஸ்டாரையும், உலக நாயகனையும் இணைத்து 16 வயதினிலே படத்தை இயக்கிய பாரதிராஜா, மறுபடியும் அவர்கள் இருவரையும் வைத்து இயக்க தயார் என்று கூறியுள்ளார். அவங்க ரெடி என்றால் சம்பளமே வாங்காம அந்த படத்தை முடித்துக்கொடுக்க தான் தயார் என்றும் அவர் கூறியுள்ளாராம். ஆனால் ரஜினியும், கமலும் இதற்கு என்ன சொல்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் இப்படியொரு பேச்சு அடிபட்டது. அப்ப எந்த பதிலும் கிடைக்கவில்லை. இயக்குநர் இமயம் கூறியுள்ளதால் பதில் கிடைக்குமா என்று பார்ப்போம்.

0 கருத்துக்கள் :