வெளிநாட்டவர்கள் உட்பட தமிழ், முஸ்லிம் கைதிகள் எவரும் பலியாகவில்லை

10.11.12

வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகளுக்கும் படை வீரர்களுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சம்பவத்தில் பலியான 27 பேரில் வெளிநாட்டவர்கள் எவரும் பலியாகவில்லையென புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஸ்ட ஆலோசகர் எம்.எஸ்.சதீஸ்குமார் வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார். இதேவேளை தமிழ், முஸ்லிம் கைதிகள் எவரும் பலியாகவில்லை எனவும் தெரிவித்தார். முன்னதாக இச்சம்பவத்தில் பலியானவர்களில் இரு வெளிநாட்டவர்களும் 3 தமிழ் கைதிகளும் உயிரிழந்ததாக அறிவித்திருந்தார். இந்நிலையில் பலியான 27 பேரில் மிகுதி 16 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். முன்னதாக சிங்கப்பூர் நாட்டைச்சேர்ந்த ஒருவர் பலியானதாக கூறப்பட்ட போதிலும் அவருடைய முகச் சாயலை ஒத்த வேறு நபர் ஒருவரே பலியானதாகவும் பின்னர் இனம்காணப்பட்டதாகவும் தெரிவித்தார்.

0 கருத்துக்கள் :