பூந்தமல்லி சிறப்பு முகாமில் ஈழதமிழர் உண்ணாவிரதம்

25.11.12


பூந்தமல்லியில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் இலங்கையை சேர்ந்த பரமேஸ்வரன், தம்பிதுரை உள்பட 7 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். பரமேஸ்வரன் மீது 2008-ம் ஆண்டு தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு பால்ரஸ் குண்டுகளை கடத்தியதாக கியூ பிரான்ச் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தாம்பரம் கோர்ட்டில் நடந்து வந்தது. கடந்த ஏப்ரல் மாதம் வழக்கு விசாரணை முடிந்து பரமேஸ்வரனை நீதிபதி விடுதலை செய்தார். இருப்பினும் அவர் தொடர்ந்து அகதிகள் சிறப்பு முகாமிலேயே அடைக்கப்பட்டு இருந்தார். இதனை கண்டித்தும், தன்னை திறந்தவெளி முகாமுக்கு மாற்றக் கோரியும் கடந்த 4 நாட்களாக பரமேஸ்வரன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். உடன் உள்ள மற்ற 6 பேரையும் திறந்தவெளி முகாமுக்கு மற்றவும் கோரிக்கை விடுத்துள்ளார். அவரது போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. அதிகாரிகள் சமாதான பேச்சு நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே சிறப்பு முகாமில் இருந்த செந்தூரன் தொடர் போராட்டத்திற்கு பின்னர் திறந்தவெளி முகாமிற்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :