மாவீரர் நாள் நெருங்கிவரும் இவ்வேளையில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் வீரச்சாவு

8.11.12

தளபதி பரிதி இன்று பிரான்ஸில் இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வீரச்சாவடைந்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளருமான பரிதி அவர்கள் சிறீலங்கா புலனாய்வுத் துறையினரின் நயவஞ்சக துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வீரச்சாவடைந்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாரிஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர், கடந்த வருடமும் இதே காலப்பகுதியிலேயே பரிதி பிரான்சில் வைத்து இவ்வாறு இனந்தெரியாத நயவஞ்சகரினால் கத்திக் குத்துக்குள்ளானார். இரவுவேளை இவர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தபோது அங்கே காத்திருந்த சிலர் இவரை கத்தியால் வெட்டியும் குத்தியும் உள்ளனர். மிகவும் ஆபத்தான நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்றும் இரவுவேளை அனுவலகத்தில் இருந்து வெளியேவந்தபோது நயவஞ்சகரினால் சூட்டுக்குள்ளாகி வீரச்சாவடைந்துள்ளார். எனவே அன்றும் இன்றும் இவரை இலக்கு வைத்து தாக்கியவர்கள் ஒரு குழுக்கள் தான் என அறியமுடிகின்றது. மாவீரர் நாள் நெருங்கிவரும் இவ்வேளையில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் வீரச்சாவடைந்தமை ஈழத் தமிழர் மத்தியில் பேரிழப்பு ஆகும்.

0 கருத்துக்கள் :