தாம்பத்திய உறவுக்கு மறுப்பு! மனைவி புகாரில் கணவர் கைது!

5.11.12

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்த அழகுபாவியை சேர்ந்தவர் சங்கர் (வயது-38). இவரது மனைவி பாரதி (36). இவர்களுக்கு திருமணமாகி பத்து ஆண்டுகள் ஆகின்றது. திருமணத்தின் போது பாரதியின் பெற்றோர்கள் வரதட்சனையாக ஐந்து பவுன் நகை, மற்றும் ரொக்கப்பணம், பண்ட பாத்திரங்கள் ஆகியவை கொடுத்துள்ளனர். ஆனால், சங்கருக்கு பாரதியை பிடிக்கவில்லை. இதனால், ஒரே வீட்டில் இருந்து வந்தாலும், கனவன் மனைவி இடையிலான தாம்பத்திய உறவு இல்லாமலேயே கடந்த பத்து ஆண்டுகளாக இருவரும் வாழ்ந்துள்ளனர். சமீபகாலமாக, சங்கருக்கு வேறு ஒரு பெண்ணுடன் பாலியல் ரீதியிலான நட்பு இருந்து வந்துள்ளது பாரதிக்கு தெரிய வந்தது. தனது கணவர் சங்கருக்கும், அந்த பெண்ணுக்குமான இந்த “கூடாநட்பை” பாரதி கண்டித்துள்ளார். இதனால், பாரதிக்கும் சங்கருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. பாரதியை கடுமையாக அடித்த சங்கர் தன்னுடைய வீட்டை விட்டு துரத்திவிட்டார் என்று கூறப்படுகிறது. கடந்த வாரம், தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு சென்ற பாரதி, அங்கிருந்து ஓசூர் மகளிர் காவல் நிலையத்துக்கு சென்று, தன்னோடு கணவன் தாம்பத்திய உறவு வைத்துகொள்ளலாமல், மற்ற பெண்களிடம் உறவு வைத்துகொண்டுள்ளார். இதை கண்டித்தால் , என்னை அடித்தது கொடுமை படுத்துகிறார் என்று தன்னுடைய கணவர் மீது புகார் கொடுத்துள்ளார்.பாரதியின் புகாரை பெற்று அதன் மீது விசாரணை நடத்திய காவல் ஆய்வாளர் அந்த புகார் உண்மை என்று தெரிந்ததால், சங்கரை கைது செய்துள்ளார்.

0 கருத்துக்கள் :