வெலிக்கடை சிறைக்கைதிகள் கொல்லப்பட்ட படங்கள். (மென் இதயம் கொண்டோர் பார்க்க தடை)

21.11.12

இலங்கை இராணுவ கொமாண்டோக் களால் கலவரம் அடக்கப்பட்ட பின்னர், சிறப்பு அதிரடிப்படையினரால் இவர்கள் கொல்லப் பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர். கலவரம் முற்றாக முடிபுக்கு வந்தபின்னர் சிறப்பு அதிரடிப் படையினர் பெயர்ப் பட்டியல் ஒன் றுடன் வந்து அவர்களை வெளியே வருமாறு அழைத்தனர். இவ்வாறு வெளியே அழைக்கப்பட்டவர் கள் 11 பேர் படுகொலை செய்யப்பட்ட நிலை யில் சடலங்களாக மீட்கப்பட்டதாக அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார். சிறைச்சாலையில் நடைபெற்ற உண்மை யான நிலை குறித்த தகவல்கள் வெளியே கசி வதைத் தடுக்கும் வகையில் அதிகாரிகள் பலரின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படு வதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த அச்ச சூழ்நிலை காரணமாக பல தக வல்களை வெளியிட அஞ்சுவதாக அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.(thaaitamil.com)

0 கருத்துக்கள் :