பெருந்திரளான மக்கள் கலந்துகொள்ளப்போகும் கேணல் பரிதியின் இறுதி நிகழ்வு

20.11.12


வரும் 24ம் திகதி சனிக்கிழமை காலை நடைபெறவுள்ள கேர்ணல் பரிதியின் இறுதி நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்வார்கள் என்று அறியப்படுகிறது.

விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம் அவர்கள் லண்டனில் மரணமடைந்த பின், வெளிநாடு ஒன்றில் மரணமடைந்த அதியுயர் பதவி நிலை தளபதி கேணல் பரிதி ஆவார்.
எனவே பல்லாயிரக்கணக்கான மக்கள் இதில் கலந்துகொள்ள வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஜென்மனி, சுவிஸ், நெதர்லாந்து, நோர்வே, டென்மார்க், பெல்ஜியம் மற்றும் லண்டனில் இருந்து தமிழர்கள் பிரான்ஸ் நோக்கி படையெடுக்க இருக்கிறார்கள்.
பலர் வெள்ளிக்கிழமை, புறப்பட்டு சனிக்கிழமை காலை பிரான்ஸ் செல்ல ஏற்பாடுகளைச் செய்துள்ளார்கள். இதேவேளை லண்டனில் உள்ள பல நகரங்களில் இருந்து பேரூந்துகள் புறப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதேவேளை கூட்டாகச் சேர்ந்து தனி விமானம் ஒன்றை ஒழுங்கு செய்து பிரான்ஸ் செல்லவும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். தமிழீழ தேசிய கொடியோடு பிரான்ஸ் செல்லும் விமானமும் இதுவாகத் தான் இருக்கும் !
பெரும் எழுச்சியுடன் நடைபெறவுள்ள பரிதியின் நிகழ்வுகள் தொடர்பாக பிரான்ஸ் பொலிசார் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்து கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் இந் நிகழ்வுக்கு போதிய பாதுகாப்பை வழங்க இருக்கிறார்கள்.

0 கருத்துக்கள் :