ஐரோப்பா புலிகள் ஆதரவு சக்திகளால் இலங்கைக்கு அச்சுறுத்தலாம்

12.11.12


ஐரோப்பாவில் உள்ள விடுதலைப் புலிகள் மற்றும் விடுதலைப் புலிகள் ஆதரவு சக்திகளால் இலங்கைக்கும், ஏனைய நாடுகளுக்கும் அச்சுறுத்தல் உள்ளதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளரான பரிதி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே, இலங்கை பாதுகாப்பு அமைச்சு இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களின் ஆதரவு சக்திகள் ஐரோப்பாவில் எவ்வாறு செயற்படுகின்றன என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு உதாரணம். ஐரோப்பிய மண்ணில் இவர்களின் செயற்பாடுகள் தொடர்வது இலங்கைக்கு மட்டுமன்றி உலகிற்கே அச்சுறுத்தலாக அமையும் என்றும் இலங்கை பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.

0 கருத்துக்கள் :