லெப்.கேணல்கள் அறிவு, தூயவன் - கரும்புலி மேஜர் வித்தி ஆகியோரின் நினைவு நாள் இன்று

8.11.12

08.11.1994 அன்று யாழ். வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் தரையிறங்கு கலமான பபதா கலத்தின் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி மேஜர் வித்தி(வேதமணி) அவர்களின் நினைவு நாளும்,

08.11.1999 அன்று மன்னார் பூநகரி கடற்பரப்பில் தவறுதலாக இடம்பெற்ற படகு விபத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட யாழ். மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் தூயவன் அவர்களின் நினைவு நாளும்,

08.11.2006 அன்று மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட திருகோணமலை மாவட்ட துணைத் தளபதி லெப்.கேணல் அறிவு அவர்களின் நினைவு நாளும் இன்றாகும்.

 தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம் . 

 தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த அனைத்து போராளிகளையும் இன்நாளில் நினவுகூருகிறோம்.

0 கருத்துக்கள் :