இலங்கை மீது தடைவிதிக்க நேரிடும்: ஐரோப்பிய ஆணைக்குழு எச்சரிக்கை

18.11.12

இலங்கை அரசு சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக ஐரோப்பிய ஆணைக்குழுவின் கடல்வள விவகார ஆணையாளர் மாரியா டமான்கனி தெரிவித்துள்ளார். சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் இலங்கை உள்ளிட்ட எட்டு நாடுகள் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை, கம்போடியா, பிஜீ தீவுகள், கய்னா, பனாமா, டொகோ மற்றும் வனுவாட்டு மற்றும் பெலிஸீ ஆகிய நாடுகள் மீதே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்கத் தவறினால் அந்நாடுகள் மீது தடைகள் விதிக்க நேரிடும் என ஐரோப்பிய ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை ஒரு மஞ்சள் அட்டையே என்றும், அதற்கடுத்த கட்டமாகவே கறுப்புப்பட்டியலில் உள்ளடக்குவது குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

0 கருத்துக்கள் :