லெப்.கேணல் மல்லி(அமுதன்) நினைவு நாள் இன்று

17.11.12


17.11.1994 அன்று நெடுங்கேணிப் பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து நடத்திய தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் மல்லி(அமுதன்)(சின்னத்தம்பி பத்மநாதன் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு) அவர்களின் நினைவு வணக்க நாள் இன்றாகும். சிறிலங்காவில் சந்திரிகா தலைமையில் புதிய அரசு தேர்ந்தெடுக்கப்பட்டதையொட்டி தமிழீழ விடுதலைப் புலிகள் நல்லெண்ண நடவடிக்கையாக அறிவித்த தன்னிச்சையான போர்நிறுத்த காலப்பகுதியிலேயே சிறிலங்கா படையினரால் லெப்.கேணல் மல்லி மீதான தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவனை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம் . 

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த அனைத்து போராளிகளையும் இன்நாளில் நினவுகூருகிறோம்.

0 கருத்துக்கள் :