விநாயகம் கைது செய்யப்படவில்லை!

19.11.12

விடுதலைப் புலிகளின் முத்த தளபதி பரிதி படுகொலை தொடர்பில் விநாயகம் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளில் எதுவித உண்மையும் இல்லை எனத் பிரெஞ்சு காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பரிதி படுகொலை தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்ற நிலையில், இவ்விருவரைத் தவிர படுகொலை சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்த முக்கிய பிரதிநிதிகள் உட்டப படுகொலை தொடர்பில் பல்வேறு தரப்பினரிடம் விசாரணைகளைத் தாம் மேற்கொண்டு வருவதாக பிரஞ்சு காவல்துறை தெரிவித்துள்ளது.

0 கருத்துக்கள் :