வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் இடம்பெற்ற போராளியின் திருமணம்!

24.11.12

இறுதிப்போரில் அங்கவீனமடைந்த விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி ஒருவருக்கும், முன்னாள் பெண் போராளி ஒருவருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது.

வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் இந்த திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த சுந்திரலிங்கம் சுதர்ஷன் மற்றும் முல்லைத்தீவு முந்தையன்கட்டு பிரதேசத்தை சேர்ந்த சிற்றப்பலம் பிரியதர்ஷனி ஆகியோர் நேற்று இவ்வாறு திருமணம் செய்து கொண்டனர்.

இவர்கள் இருவரும், பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த திருமண வைபவத்தில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர்  மற்றும் இராணுவ அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

0 கருத்துக்கள் :