எப்படி கூட்டினாலும் நாம் குடிப்பதை நிறுத்தப்போவது இல்லை யுவர்ராணர்

13.11.12

எங்கு வரி கூடினாலும் கலவரமும் ஊர்வலமுமாக இருக்கையில் நாம் மட்டும் அமைதியாக வேண்டிக்குடிக்கின்றோம் எங்களுக்கு நன்றி சொல்ல ஒரு கட்சியோ எம்பியோ இல்லை நாட்டின் வரிச்சுமையை குறைக்கும் எம் போன்ற குடிகார கும்பலுக்கு மன்னிக்கவும் குடிமக்களுக்கு தீபாவளி என்றும் பாராமல் விலையேற்றிய செய்தி கேட்டும் வேண்டிக்குடிக்கும் எங்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்லகூட இந்தஉலகில் யாரும் இல்லை நாடே சரியில்லை போங்க பாவனையில் உள்ள அனைத்து வெளிநாட்டு மதுபானங்களினதும் விலைகள் அதிகரிக்கபட்டுள்ளதாக டிஸ்டிலர்ஸ் (லங்கா) கம்பனி தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தில் வெளிநாட்டு மதுபானங்களுக்கு 25 சதவீத வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டதாக அந் நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த வகையில் ஒரு போத்தல் விசேட சாராயம், புளூ மற்றும் வைட் லேபல் சாராயம் ஆகியவற்றின் விலை 20 ரூபாவினாலும் ஒரு போத்தல் விஸ்கி மற்றும் பிராண்டி தயாரிப்புக்களின் விலை 30 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. எனினும் தென்னஞ்சாராயத்தின் விலை அதிகரிக்கப்பட வில்லை

0 கருத்துக்கள் :