ஆண் குழந்தை தகராறு மனைவி தீக்குளிப்பு! காப்பாற்ற சென்ற கணவனும் உயிரிழப்பு

16.11.12


அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் இரும்பு-க்குறிச்சி அருகே கிளிமங்கலத்தைச் சேர்ந்தவர் சேகர் (35). இவரது மனைவி அறச்செல்வி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 12.11.2012 அன்று அறச்செல்வி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது அவரது கணவர் சேகர் அவரை காப்பாற்ற முயன்றுள்ளார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த கணவன் மனைவி இருவரும் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அறச்செல்வி சம்பவத்தன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சேகர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆண் குழந்தை இல்லை என்ற தகராறில் அறச்செல்வி தீக்குளித்ததாகவும், அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சேகர் காப்பாற்ற சென்றபோது தீக்காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்

0 கருத்துக்கள் :