மாற்றம் என்ற சொல்லைத்தவிர எல்லாமே மாறும்... இதோ புகைப்படங்களுடன் கலாச்சார மாற்றம்

11.11.12

பெண்களே செய்த இறுதி காரியம்!..தர்மபுரி மாவட்டம் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த இளவரசன் என்பவர், செல்லன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த திவ்யாவை கடந்த அக்டோபர் 15ஆம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டார். இதனால் மனமுடைந்த திவ்யா தந்தை நாகராஜ் கடந்த 7ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது உறவினர்கள் நததம் கிராமம், மாறவாடி, அண்ணாநகர், கொண்டம்பட்டி போன்ற பகுதிகளில் உள்ள குடிசைகளுக்கு தீ வைத்தனர். இதில் 154 வீடுகள் சேதம் அடைந்தன. இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக இதுவரை 117 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 20 பேர் மாணவர்கள் ஆவர். அவர்களை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் போலீசார் ஒப்படைத்துள்ளனர். இதனால் நாகராஜ் இறுதி காரியம் செய்ய கூட ஆள் இல்லாமல் நாகராஜ் உடல் மார்ச்சுவரில் இருந்து வந்தது. 11.11.2012 அன்று பாமக நிர்வாகிகள் மாநில துணைபொது செயலாளர் சரவணன், முன்னால் எம்எல்ஏ வேலுச்சாமி, வெங்கடேசன், அரசாங்கம், வணங்காமுடி, மாது, சாந்தமூர்த்தி, பாரிமோகன், சுப்பரமணியன், மாரிமுத்து போன்ற பாமக-வின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கைது பயத்தால் செல்லன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த ஆண்கள் யாரும் நாகராஜின் இறுதி காரியத்தில் கலந்து கொள்ளவில்லை, இதனால் பெண்களே நாகராஜின் இறுதி காரியம் செய்தனர்.(நன்றி :நக்கீரன்)

0 கருத்துக்கள் :