விமானி ஆக வேண்டும் என்ற இலட்சியத்துடன் யாழ் இளைஞன்

13.11.12


யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவரின் மகன்தான் மதுஷன் வைகுந்தநேசன். சொந்த இடம் உடுப்பிட்டி. வயது 18. ஐந்தாம் வகுப்பு வரை உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரியில் படித்தவர். பின் கொழும்புக்கு வந்து சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வியைத் தொடர்ந்தவர். விமானி ஆக வேண்டும் என்பது இவரது சிறுவயது முதலான ஆசை. இவரும் வளர, வளர விமானி ஆக வேண்டும் என்கிற ஆசையும் வளர்ந்ந்து கொண்டே வந்தது. உலகின் வயது குறைந்த விமானி ஆக வேண்டும் என்கிற இலட்சியத்தை மனதில் வரித்துக் கொண்டார். இவரது படிப்புக்கு அப்பா கணக்குப் பாராமல் செலவு செய்வார். அத்துடன் இவரது அபிலாஷையையும் தட்டிக் கொடுத்தார். சிறந்த விமானிகளை உருவாக்குவதில் பெயர் பூத்த பல்கலைக்கழகங்களில் ஒன்று ஆஸ்திரேலியாவின் RMIT பல்கலைக்கழகம். லண்டன் ஏ. எல் ஐ படித்து முடித்தவுடனேயே ஆஸிக்கு புறப்பட்டு வந்து விமானி ஆகின்றமைக்கான உயர் படிப்பை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்றார் மதுஷன். கற்கை நெறிக் காலம் சுமார் 13 மாதங்கள். விரைவில் படிப்பை நிறைவு செய்து கொள்வார். பின்பு அவர் அங்கீகரிக்கப்பட்ட ஒரு விமானி. தற்போது பயிலுனராக விமானங்களை ஓட்டுகின்றார். விமானிகள் பட்டப் படிப்பு பொன் முட்டை இடுகின்ற வாத்து மாதிரி. இப்படிப்பை கற்கின்றமைக்கு 75 இலட்சம் ரூபாய் வரை செலவாகின்றது. ஆனால் கிடைக்கப் பெறுகின்ற சம்பளம் பல மடங்காக இருக்கும். அனுபவம் வாய்ந்த விமானி ஒருவரால் வருடம் இரண்டு கோடி ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.

0 கருத்துக்கள் :