வடதமிழீழத்தில் காணாமல் போகும் முன்னாள் போராளிகள்.

6.11.12


இலங்கை அரசாங்கத்தினால் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்திய முன்னாள் விடுதலைப் புலி போராளிகள் மீண்டும் காணாமல் போகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. வடதமிழீழ்த்தில் இந்த நிலை அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த மாதத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் ஒரே சந்தர்ப்பத்தில் ஏழு இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் ஒன்று கூடியிருந்த இடமொன்றில் வைத்து படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு பிடித்து செல்லப்பட்டதாக தெரியவருகிறது. இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட்டவர்களில் ஒருவர் அரச சார்பற்ற நிறுவனமொன்றில் பணியாற்றி வந்துள்ளார். இதன் பிரகாரமே இக்கடத்தல்கள் பற்றிய தகவல்கள் அம்பலமாகியுள்ளன. சமூகமயப்படுத்தப்பட்ட போராளிகளினில் பலர் வன்னியிலும் அதே போன்று யாழ்.குடாநாட்டிலும் கடத்தப்பட்டு காணாமல் போயிருந்த போதிலும் அவர்கள் பற்றி தகவல்கள் ஏதுமற்ற நிலையே காணப்பட்டு வருகின்றது. அவ்வாறு பிடித்து செல்லப்பட்டவர்கள் பற்றி தகவல்களை வழங்க படைத்தரப்பு தொடர்ந்தும் மறுத்தே வருகின்றது. குறிப்பாக ஆயுதங்கள் மற்றும் விடுதலைப புலிகளது சொத்துக்களை பேணிவருபவர்களே இலக்கு வைக்கப்படுவதாக படைத்தரப்பு கூறிவருகின்றது.

0 கருத்துக்கள் :