யாழ்ப்பாண பல்கலை மாணவர்களின் பாதுகாப்புக்கு பொறுப்பு யார் ?

16.11.12


யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களுக்கும் இதனைசூழ உள்ள இடங்களில் இருக்கும் சில காடையர்களுக்கும் இடையே நேற்று மாலையும் கடந்த சில தினங்களுக்கு முன்னரும் சண்டைகள் இடம் பெற்றுள்ளது.

இதற்கான அடிப்படைகாரணங்களாக விடுதியில் உள்ள மாணவிகளை வெளியில் உள்ள கட்டாக்காலி இளைஞர்கள் தகாத வார்த்தைகளால் சொல்லி பேசியிருக்கின்றனர். இதனை கேட்ட மாணவர்கள் அவர்களிடம் சண்டை போட்டிருக்கின்றனர்.
இதன் பின்னர் சூழ உள்ள மற்ற நண்பர்களை கூட்டிக்கொண்டு கட்டாக்காலி இளைஞர்கள் கத்தி பொல்லு வாள்கள் என்பன கொண்டு மாணவர்களை தாக்க முற்பட்டுள்ளனர், பின்னர் நீண்ட நேரத்தின் பின்னர்தான் போலீசார் அங்கு வந்து பிரச்சினைக்கு தலையிட்டனர்.
இன்று மாலையும் இதேபோலத்தான் பல்கலை மாணவருடன் சில கட்டாக்காலி இளைஞர்கள் மோதலில் ஈடுபட்டு அவர்களின் மோட்டார் சைக்கிலினை அடித்து நொறுக்கியுள்ளனர். பின்னர் விடுதி மாணவர்களிடம் சென்று அவர்களை வெட்டுவோம் என்று மிரட்டியும் உள்ளனர்,

சரி இவர்கள் யார் என்று நோக்கினால் இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் ஒட்டுக்குழுவினர் ஆகும்.
ஒரு படித்த சமூகத்தை அளிக்க நினைக்கும் இவர்களுக்கு எம் தமிழன் வன்னியில் ஒவ்வொரு நாளும் செத்து மடியும் போது என்ன வானத்தில் வெள்ளியா பார்த்தாங்க? இதே யாழ் மண்ணிலே இத்தனை இளைஞர்கள் பார்த்திருக்க எம் சகோதரி கிருசாந்தினியை இலங்கை இராணுவம் படுகொலை செய்தபோது பார்த்திருந்த இளைஞருக்கா இப்படி கத்தியும் போல்லும் தூக்க துணிச்சல் வந்தது?

சரி கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் வன்னியிலே யுத்தம் நடந்து கொண்டிருந்த போது ஊரடங்கு சட்டம் போட்டுவிட்டு ஒவ்வொரு வீடு வீடாக சென்று இராணுவம் இழுத்து சுட்ட போது என்ன இவர்களால் செய்ய முடிந்தது?
முதல்ல தமிழ் இளைஞர்கள் சிந்திக்க வேண்டும் எமது தமிழீழம் வீடிவு பெற வேண்டும் என்றால் நாம் விழிப்படைய வேண்டும்
இலங்கை அரசாங்கமானது எம் இனத்தை திட்டமிட்டபடியே அளித்து கொண்டு இருக்கின்றான். ஈழத்தில் எம்மை உலக நாடுகளுடன் சேர்ந்து தெரு நாய்களை போல மாற்றியவன் இன்று வெளிநாட்டில் எம் தலைவர்களை தாக்க தொடங்கிவிட்டான். எம்மை அளிக்க அவனுக்கு எங்கிருந்து துணிச்சல் வருகிறதோ அதேபோல நாமும் விழிப்படைய வேண்டும்.
ஒரு விடயத்தை நாம் முதலில் புரிய வேண்டும் எம்மினத்தை நாம்தான் பாதுகாக்க வேண்டும்.
யாழ் இளைஞர்கள் எல்லோரும் இப்போது குடிகார இளைஞர்களாக மாறிக்கொண்டு இருக்கிறார்கள் எங்கள் இனம் எங்கே போகிறது?
இதனை எம்மால் தட்டிக்கேட்க முடியாத நிலைமை காணப்படுகின்றது.

பெண்பிள்ளைகளை பெற்ற பெற்றோர்கள் எந்த நேரமும் தனது பிள்ளைக்கு எதுவும் நடக்கலாம் என்று அஞ்சுகின்றனர்.
புலம் பெயர்ந்த உறவுகளே உங்கள் சகோதரங்களுக்கு பணம் அனுப்பும் போது கண்மூடித்தனமாக அனுப்பாதீர்கள்.
இடம்பெயர்ந்த எம் உறவுகள் வறுமையால் துன்பப்படும் போது நீங்கள் கஷ்ரப்பட்டு அனுப்பும் பணத்தை இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரிகின்றதா?
தமிழர்களே எங்களுக்குள் எதற்கு பகைமை?
சிங்களவனை பாருங்கள் எம்மை அளிப்பதற்கு மட்டும ஒற்றுமையாக வருகின்றான்.
இன்று வடக்கில் நடப்பது என்ன?
இராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் இளைஞர்களுக்கு “தாய் நாட்டை காட்டிக்கொடுப்பது தன் தாரத்தையும் தாயையும் மாற்றானுக்கு விற்பதற்கு சமமானது” நீங்கள் இத்தகைய மனிதனா என்பதனை முதலில் புரிந்து கொள்ளுங்கள்? என்றோ ஒருநாள் ஆமி உங்களை விரட்டுவான் அப்போது தெரியும் சிங்களவனின் குணம்.
ஒன்றை யோசித்து பாருங்கள் தமிழனுடன் சம்பந்தமே இல்லாத உதைபந்தாட்ட வீரன் மரடோனா எம் தலைவரின் பெயரை ஒரு போலீஸ் காரனின் சட்டையில் பார்த்தவுடன் அவனை கட்டித்தழுவி முத்தம் கொடுத்தார்.
அப்படி என்றால் எவ்வளவு தூரம் எம் தலைவர் மீதும் பாசம் வைத்திருக்கிறார் என்று பாருங்க? இதே உணர்வு எம் தமிழர் எல்லோருக்கும் இருக்கா என்பதை ஒருகணம் உங்க நெஞ்சை தொட்டு கேட்டுப்பாருங்கள். உங்களுக்கு புரியும் நீங்கள் செய்வது சரியா பிழையா என்று. எம்தோழர்கள் எம்முடன் வந்து பேசும் இந்த மாதத்திலிருந்து எம்முடைய மண்ணை மீட்க எல்லோரும் சேர்ந்து போராடுவோம்.ஒன்று பட்டால் உண்டு வாழ்வு எல்லோரு ஒன்றாக கூடி தமிழீழம் பெறுவோம்.
"தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் "

யாழ்ப்பாணம் கண்ணன்

0 கருத்துக்கள் :