வடக்கு, கிழக்கிலிருந்து இராணுவத்தை விலக்க வேண்டும் மீண்டும் அமெரிக்கத் தூதுவர் !

5.11.12

வடக்கு, கிழக்கு பகுதிகளில் பொதுமக்களின் செயற்பாடுகளில் இராணுவத் தலையீடு அதிகரித்தே உள்ளது. இந்த செயற்பாட்டை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்று சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் மைக்கல் ஜே சிசன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இனப்பிரச்சினை விவகாரம் தொடர்பில் அரசதரப்பிடம் சரியான முடிவு எதனையும் அவதானிக்கமுடியவில்லை எனறும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இனப்பிரச்சினையைத் தீர்க்கப்பதற்கு உதவ அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தயாராகவே உள்ளன.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

வடக்கில் அதிகளவு படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் சிறிலங்காவுக்கான பிரித்தானியத் தூதுவர் அண்மையில் வெளியிட்ட கருத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்தநிலையில், அமெரிக்கத் தூதுவரும் அதே கருத்தை வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

0 கருத்துக்கள் :