கார்த்திகையில் ஒன்றிணையும் தீபங்கள்

23.11.12


வடக்கு - கிழக்கில் பெரும்பகுதி விடுதலைப்பலிகளின் கட்டுப்பாட்டில் இருந்போது போராட்டத்தில் சாவடைந்த வீரர்களின் நினைவாக ஆண்டுதோறும் நவம்பர் 27ஆம் திகதி மாவீர்ர் தினம் கொண்டாடப்பட்டுவந்தது. 2009 பின் மாவீரர்நாளை கொண்டாடுவதற்கு அரச தரப்பு தமிழ்மக்களுக்கு அனுமதிக்கவில்லை. தமிழீழ பிரதேசங்களில் இருந்த மாவீரர் துயிலுமில்லங்கள் யாவும் இடித்து அகற்றப்பாட்ட இந்த நிலையில் அவர்கள் எம் மாவீரசெல்வங்களுக்கு ஆன்மீக வழியில் வணக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த வருடம் நவம்பர் 27இல் கார்த்திகை விளக்கீடுட்டின் குமாராலய தீபம்,பௌத்தர்களது பௌர்ணமி தினம், மாவீரர் நாள் என்பன ஒன்றிணைகின்றன. முதல் முறையாக மாவீரர் நாள் , குமாராலய தீபம் , போயா தினம் என்பன ஒரே நாளில் வருவதால் தமிழ் , சிங்கள மக்கள் நவம்பர் 27 இனை இணைந்து நினைவுகூரவுள்ளனர்.

0 கருத்துக்கள் :