யாழ். சாவகச்சேரியில் குண்டுவெடித்ததில் இளைஞன் படுகாயம்

18.11.12


யாழ். சாவகச்சேரி சரசாலையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த இளைஞன் காலை 9.30 மணிக்கு தனது தோட்டத்தை துப்பரவு செய்யும் போது அதற்குள் இருந்த வெடிபொருள் ஒன்று வெடித்ததில் முகத்தில் படுகாயமடைந்த நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் சாரசாலை மேற்கைச் சேர்ந்த கந்தசாமி எழில்கரன் (வயது 21) என்ற இளைஞரே படுகாயமடைந்துள்ளதாக யாழ் வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

0 கருத்துக்கள் :