யாழ் கோண்டாவிலில் பகுதியில் மாவீரர் தினச் சுவரொட்டிகள் ! பதற்றத்தில் இராணுவம்

24.11.12


உலகெங்கும் பரந்து வாழும் ஈழத்தமிழ் மக்களால் அனுஷ்டிக்கப்படும் மாவீரர் தினத்தை நினைவு கூரும் வகையில் கோண்டாவிலின் சில பகுதிகளில் மாவீரர் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. யாழ்.கோண்டாவில் ஸ்ரேசன் வீதி, கோண்டாவில் சி.சி.தமிழ் கலவன் பாடசாலை, கோண்டாவில் டிப்போ பகுதகளிலேயே கடந்த புதன்கிழமை இரவு முதல் இவை ஒட்டப்பட்டுள்ளன.மஞ்சள் மற்றும் வெள்ளைநிறக் காதிதங்களில்
 “மாவீரர்கள் தம்மை உருக்கித் தமிழருக்கு ஒளிதந்த வீரர்கள்”
என்ற வாசகத்துடன் மாவீரர் தினத்தை சித்தரிக்கும் வகையிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், விடுதலைப் புலிகளின் புலிச் சின்னம் “மாவீரர் நாள் கார்த்திகை 27”என்று கார்த்தகைப் பூவின் படத்துடன் இவை ஒட்டப்பட்டுள்ளன. இச்சுவரொட்டிகள் அனைத்தும் இரவோடிரவாக படைப்புலனாய்வாளர்கள் மற்றும் இராணுவத்தினரால் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளன. மேலும் இச்சம்பவங்களைத் தொடர்ந்து அப்பகுதியில் படைப்புலனாய்வாளர்களின் நடமாட்டங்கள் அதிகரித்துள்ளன. இதேவேளை, கடந்த 19ம் திகதியும் வல்வெட்டித்துறை தீருவில் பகுதியிலும் புலிக்கொடி பறக்கவிடப்பட்டு பின்னர் அது அங்கிருந்து அகற்றப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :