இராணுவத்தின் வீடுகளாகும் வடமராட்சி கிழக்கு பிரதேசம்

8.11.12

இராணுவ மயமாகின்றது வடமராட்சி கிழக்கு. யுத்தம் முடிந்த பின்னர் மூன்று ஆண்டுகளுக்கு பின்னரும் இராணுவத்தினர் தமது நிலைகளை விட்டு நகரவில்லை. வடக்கே மணற்காடு தொடக்கம் தெற்கே சுண்டிக்குளம் வரையான கிட்டத்தட்ட ஐம்பத்து ஐந்து சதுர கிலோ மீற்றர் கொண்ட பிரதேசமே வடமராட்சி கிழக்கு பகுதியாகும். இதிலே ஒரு விடயத்தினை குறிப்பிட வேண்டும் இங்குள்ள பதினெட்டு கிராம சேவகர் பிரிவுகளிலும் ஒவ்வொரு கிராமத்திலும் இராணுவ முகாம்கள் காணப்படுகின்றது.

கட்டைக்காட்டில் இருந்து சுண்டிக்குளம் வரையான பகுதி இன்றுவரைக்கும் உயர் பாதுகாப்பு வலையமாகவே காணப்படுகின்றது. எந்த ஒரு மனிதனும் இந்தப்பகுதிக்குள் செல்ல முடியாதவாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் இது சிங்களவர்களுக்கு மட்டும் விதிவிலக்காக காணப்படுகின்றது. இந்தப்பகுதியினுள் சிங்கள மீனவர்கள் மட்டுமே செல்லக்கூடியவாறு இலங்கை பாதுகாப்பு அமைச்சு அனுமதியளித்துள்ளது. இதனை விடவும் கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி, ஆழியவளை, கேவில் ஆகிய பிரதேசங்களின் காட்டுப்பிரதேசப்பகுதியினை முழுமையாக இலங்கைப்படையினர் தமது கட்டுப்பட்டுக்குள் வைத்திருக்கின்றனர்

இது கடற்படையினரால் வெற்றிலைக்கேனிக்கும் கட்டைக்காட்டுக்கும் இடைப்பட்ட கடல்கரை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் இராணுவ முகாமும் விடுதியுமாகும்.

ஒவ்வொரு கடற்கரையோர கிராமத்திலும் கரையோர முகாம்கள் காணப்படுகின்றது. இத்த முகாம்களில் இராணுவ கடற்படையினர் நிலைகொண்டுள்ளனர். இவர்களுக்கு என்ன வேலை எனில் கடலுக்கு செல்லும் மீனவர்களின் மீன்பிடிப்படகுகளை அவர்கள் கடலுக்கு போகும் போதும் திரும்பி வரும்போதும் பதிவு செய்தலாகும். அத்துடன் இப்படையினர் மீனவர்களிடம் மீன்களை இலவசமாக வாங்கி கருவாடு போட்டு தாம் விடுமுறையில் வீட்டுக்கு போகும் போது கொண்டு செல்கின்றனர்.

இதனைவிடவும் இங்குள்ள கடற்படையினர் இவ்வூரிலுள்ள தனியாக இருக்கும் பெண்களின் தொலைபேசி இலக்கங்களை களவாக திருடி எடுத்து இரகசியமாக தொடர்பை பேணி வருகின்றனர். இதனை பெயர் கூற முடியாத தமிழ் இளைஞர்கள் ஆவேசமாக தெரிவிக்கின்றனர். இராணுவத்தினர் பணம் காட்டி மோசம் செய்வதாகவும் தெரிவிக்கின்றனர். இவர்களின் இத்தகைய முயற்சிகளுக்கு இராணுவ புலனாய்வுப்பிரிவினறும் துணை போகின்றனர். புலனாய்வாளருடன் பணத்திற்கு விலை போகும் ஒரு சில இளைஞர்கள் செயல்படுவதாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் அவர்களிடம் கேட்கப்போனால் தமக்கு பிரச்சினை வரும் என்று இளைஞர்களும் ஒதுங்கி நிற்கின்றனர். ஆகவே இது தொடர்பாக உரியவர்களிடம் எடுத்து கூறியும் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும். இது பாதுகாப்பு அமைச்சிடம் கேட்க வேண்டும் என்று ஏமாற்றுவதாகவும் கூறுகின்றனர்.

0 கருத்துக்கள் :