சிலாபம் பிரதேசத்தில் பறந்த மர்மவிமானம்?

30.11.12

சிலாபம் இரணவில பிரதேசத்தில் மர்ம விமானமொன்று தரையிறங்கியதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இரணவில பிரதேசத்தின் இறால் பண்ணையொன்றுக்கு அருகாமையில் அதிகாலை 4.00 மணியளவில் இந்த மர்ம விமானம், பாரிய வெளிச்சத்துடன் தரையிறங்கியுள்ளது.

பண்ணைக்கு ஐந்தடி உயரத்தில் குறித்த மர்மப் பொருள் சஞ்சரித்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

வானில் சஞ்சரித்த குறித்த மர்மப் பொருள் பாரிய வெளிச்சத்துடன் காணப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இறால் பண்ணையைச் சேர்ந்தவர்களும் அயலவர்களும் இந்த மர்மப் பொருளை பார்த்துள்ளனர்.

காலை 6.30 அளவில் இந்த மர்மப் பொருள் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துக்கள் :