இலங்கையில் வாகன வர்த்தகத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருகிறது சீனா

2.11.12

இலங்கையில் வாகன வர்த்தகச் சந்தையை முறியடிக்கும் வகையில் சீனா தனது வாகனச் சந்தையை இங்கு ஆரம்பிக்கவுள்ளது. இதன்படி இலங்கையில் வாகன இறக்குமதி, உற்பத்தி மற்றும் விற்பனைச் சந்தையை முற்றாகத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவுள்ளது. இதன் முதற்கட்டமாகத் தற்போது இலங்கையில் செயற்படும் சுவீடன் நாட்டுக்குச் சொந்தமான “வொல்வோ“ மோட்டார் நிறுவனத்தின் முழுமையான ஆதிக்கத்தை ஒழிக்கும் வகையில் சீனாவின் ஜீலி என்ற நிறுவனம் கொழும்பில் பாரிய வாகனச் சந்தை ஒன்றை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. அத்துடன் தற்போது இலங்கையில் செயற்படும் மைக்ரோ வாகன நிறுவனத்தையும் சீனா நீண்ட கால குத்தகைக்குக் கொள்வனவு செய்யவுள்ளது. இதன்படி “மைக்ரோ“ நிறுவனத்துக்கு இருபது மில்லியன் டாலர்களை சீன நிறுவனம் வழங்கவுள்ளது.

1 கருத்துக்கள் :

Sakthi Dasan சொன்னது…

நண்பரே,

தங்களின் பதிப்பு மிகவும் அருமை. தங்களின் இந்த அருமையான பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நமது தமிழ் களஞ்சியத்தில் பகிருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.
http://www.tamilkalanchiyam.com

- தமிழ் களஞ்சியம்