யாழ்.வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் பறந்த புலிக்கொடி? கொழும்பு ஊடகம்

20.11.12


வல்வெட்டித்துறை பகுதியில் இனந்தெரியாத நபர்களினால் புலிக்கொடி பறக்கவிடப்பட்டிருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். தீருவில் பகுதியில் அமைந்துள்ள தனியார் தொலைத்தொடர்பு கோபுரத்திலேயே இந்த புலிக்கொடி பறிக்கவிடப்பட்டிருந்ததாக பிரதேசவாசிகளை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இன்று அதிகாலை தீருவில் பகுதிக்கு வந்த இராணுவத்தினரும் பொலிஸாரும் அந்த புலிக்கொடியை அவ்விடத்திலிருந்து அகற்றியதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியில் விடுதலைப் புலிகளின் நினைவுத்தூபியொன்றே அமைக்கப்பட்டிருந்ததாகவும் பின்னர் அது அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதன்பின்னர் அப்பகுதியில் தனியார் தொலைத்தொடர்பு கோபுரம் நிர்மாணிக்கப்பட்டதாகவும் பிரதேசவாசிகள் குறிப்பிடுகின்றனர். எவ்வாறாயினும், இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெறவில்லை எனவும், தாங்கள் அவ்வாறானதொரு புலிக்கொடியை அங்கிருந்து அகற்றவில்லை எனவும் வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

0 கருத்துக்கள் :