மாவீரர் துயிலும் இல்லங்களை கண்காணிக்கும் சிறீலங்கா புலனாய்வுத்துறையினர்

22.11.12


தமிழீழத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை சிறீலங்கா புலனாய்வுப்பிரிவினர் இரவு பகலாக கண்காணித்துவருவதாக தெரியவருகிறது. இன்று மாவீரர் வாரம் ஆரம்பித்துள்ள நிலையிலேயே இவ்வாறான இரகசிய கண்காணிப்பில் சிறீலங்கா புலனாய்வுப்பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். தமிழீழ மண் மீட்பு போரில் வீரகாவியமாகிவிட்ட மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்டுள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் இனவாத சிங்கள ராணுவத்தினரால் இடித்து அழிக்கப்பட்டுள்ள நிலையில் மாவீரர் துயிலும் இல்லங்கள் இருந்த இடத்தில் மாவீரர்களின் உறவினர்கள் அஞ்சலி செலுத்த வருவார்கள் என்ற அச்சத்திலேயே இவ்வாறு சிறீலங்கா புலனாய்வுப்பிரிவினர் மாறு வேடத்தில் மாவீரர் துயிலும் இல்லங்கள் இருந்த பகுதிகளை அண்டிய இடங்களில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சமீப காலமாக யாழ்.பல்கலைக்கழகம் உட்பட்ட பல பகுதிகளிலும் தமிழீழ நினைவு நாட்கள் அங்காங்கே நினைவுகூறப்பட்டுவருகின்ற நிலையில் மாவீரர் துயிலும் இல்லங்கள் அமைந்திருந்த இடத்திலும் இவ்வாறான நிகழ்வுகள் ஏதாவது நடந்துவிடுமோ என்ற அச்சத்தின் வெளிப்பாடாகவே இந்த சம்பவம் அமைந்துள்ளது.

0 கருத்துக்கள் :