நோயாளியை சாலையில் வீசிய அரசு மருத்துவமனை

17.11.12

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வெளிமாநில நபரை, தொடர்ந்து சிகிச்சை அளிக்க மறுத்து, சாலையில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த தீரர் சிங் என்பவர் காங்கேயம் அருகே குவாரி ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் சிறுநீரக பிரச்னை ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு இங்கு உறவினர்கள் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவமனை நிர்வாகம், அவரை ஆம்புலன்சில் ஏற்றி வேறொரு பகுதியில் கொண்டு சென்று விட்டுவிட்டு வந்துள்ளது. நடுரோட்டில் நோயாளியை வீசிச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்துக்கள் :