துணை நடிகர் மனோகரன் திடீர் மரணம்

14.11.12

கோ, சகுனி சினிமா படங்களில் போலீஸ் வேடத்தில் நடித்திருப்பவர் மனோகரன் (62). இவர் தொலைக்காட்சி தொடரிலும் பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார். இவர் தினமும் நடை பயிற்சி மேற்கொள்வது வழக்கம். அதே போல் இன்ற காலை 6.30 மணிக்கு நந்தனம் ஓய்.எம்.சி.ஏ. மைதானத்திற்கு காரில் வந்து நடைபயிற்சி சென்றார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதில் அவர் அங்கேயே மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் வண்டிக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து பார்த்த போது மனோகரன் இறந்து விட்டார். அவரது உடலை ராயப் பேட்டை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சைதாப்பேட்டை இன்ஸ் பெக்டர் விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இறந்த மனோகரனுக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். பர்மா அகதியாக வந்து ராமநாதபுரத்தில் வசித்த இவர் சினிமா வாய்ப்பு கிடைத்ததால் சென்னை வந்து ஆலந்தூர் ஏகாம்பரம் டபேர் தெருவில் தனியாக வசித்து வந்தார். அவரது மரணம் பற்றி கேள்விப்பட்டதும் ஸ்டண்ட் மாஸ்டர் முத்து உள்பட ஏராளமான நடிகர்கள் ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் உள்ள அவரது உடலை பார்த்து கண் கலங்கினார்கள்.

0 கருத்துக்கள் :