தமிழ்ச்செல்வன் நினைவு தினத்தை ஒட்டி ஜேர்மன் தமிழ் இளையோர் அமைப்பு அறிக்கை!

2.11.12

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப தமிழ்ச்செல்வனின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு ஜேர்மனியின் தமிழ் இளையோர் அமைப்பினர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு,

 பிரிகேடியர் சு. ப. தமிழ்ச்செல்வன் அவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில்சாவகச்சேரியில் 1967ம் ஆண்டு பிறந்து சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் பயின்று1984ம் ஆண்டு தன்னை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில்இணைத்துக்கொண்டார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பு பெயராக தினேஸ்என்று பிரிகேடியர் சு. ப. தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு பெயர் சூட்டப்பட்டது.
ஆரம்ப காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளியாக இருந்துபடிப்படியாக வளர்ந்து போர்க்களத்தில் தளபதியாகவும் யாழ் மாவட்ட சிறப்புத்தளபதியாகவும் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் இந்தியாவில் வாழ்ந்த காலத்தில்அவரின் இணைப்பாளராகவும் பிரிகேடியர் சு. ப. தமிழ்ச்செல்வன் அவர்கள்செயற்ப்பட்டார்.
 தமிழீழ விடுதலைப் புலிகளால் 1993ம் ஆண்டு, பூநகரி இராணுவ முகாம் மீது முன்னெடுக்கப்பட்ட „தவளைப் பாய்ச்சல்’ நடவடிக்கையில் பங்குபற்றி காலில் காயம்அடைந்ததை தொடர்ந்து பிரிகேடியர் சு. ப. தமிழ்ச்செல்வன் அவர்களை தமிழீழவிடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளராக 1993ம் ஆண்டு பொறுப்பேற்று02.11.2007ம் ஆண்டு வீரமரணம் அடையும் வரை தமிழீழ விடுதலைப் புலிகளின்உயர்நிலைப் பொறுப்பாளர்களில் ஒருவராக செயற்ப்பட்டார்.
 1994 முதல் 1995ம் ஆண்டு வரை சந்திரிக்கா அரசுடன் இடம்பெற்ற பேச்சு வார்த்தையில்தமிழீழ விடுதலைப் புலிகளின் அணிக்குத் தலமையேற்றுச் செயற்பட்டார்.
2002ம்ஆண்டு நோர்வே அரசின் அனுசரணையுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில்தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் தலமையின் கீழ் இணைந்துசெயற்ப்பட்டு, அன்ரன் பாலசிங்கம் அவர்களின் சாவிற்குப் பிறகு பிரிகேடியர் சு. ப.தமிழ்ச்செல்வன் அவர்களே பேச்சு வார்த்தை அணிக்குத் தலமையேற்றுச்செயற்பட்டார்.
 தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காகவும் தமிழ் மக்களுக்காகவும் அவர் செய்தசேவையை மதிப்பளித்து, தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் 2007ம் ஆண்டு பிரிகேடியர் தமிழ்ச்செல்வன்’ என கௌரவிக்கப்பட்டார்.

தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் பிரிகேடியர் சு. ப. தமிழ்ச்செல்வன் அவர்களைப் பற்றி இவ்வாறு கூறுகின்றார்„ நான் அவனை எனது தம்பியாக நினைத்து வளர்த்தேன், தான் நேசித்த மண் விடுதலைபெறவேண்டும், தான் நேசித்த மக்கள் சுகந்திரமாக, கொளரவமாக, பாதுகாப்பாக வாழ வேண்டுமென்று சதா சிந்தித்தான். தான் நேசித்த அந்த மக்களது விடுதலைக்காக,விடிவிற்காகத் தன்னையே ஊனாக உருக்கி உறுதியாக உழைத்த ஒரு இலட்சியநெருப்பு அவன்.
அன்பான தமிழ் உறவுகளே, பிரிகேடியர் சு. ப. தமிழ்ச்செல்வன் போன்ற ஆயிரம் ஆயிரம்மாவீரர்களின் இலட்சியத்தை மீட்டெடுக்க அனைத்து தமிழர்களும் ஓரணியில் இணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

0 கருத்துக்கள் :