இலங்கைக்கு அவசரமாக வரும் அமெரிக்க விசேட பிரதிநிதி

19.11.12


13 ஆவது திருத்தத்தை ஒழிப்பதற்கான முயற்சிகள் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், இலங்கையின் தற்போதைய நிலைவரம் குறித்து ஆராய அமெரிக்காவின் விசேட பிரதிநிதி ஒருவர் இந்தவாரம் இலங்கை செல்ல உள்ளார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச்செயலர் அலிஸ்ஸா ஐரிஸ் என்ற அதிகாரியே இந்த வாரம் கொழும்புச் செல்ல உள்ளதாக எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்து நிறைவேற்றிய பிரேரணையின் பரிந்துரைகளை நிறைவேற்ற அரசு, இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதா என்பது தொடர்பில் அவர் முக்கியமாக அரசுத் தலைவர்களுடன் பேசுவார், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றதா என்பது குறித்தும் ஆய்வுகளை நடத்துவார். அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் முதன்முறையாக இலங்கை செல்லள்ளமை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஐரிஸ் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச்செயலர் றொபேட் ஓ பிளேக்கிற்கு அடுத்த நிலையில் உள்ளவர். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடரில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது. இலங்கை அரசினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றி, தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு சிறந்ததோர் தீர்வை வழங்குவதற்கு அரசுக்கு அழுத்தம் கொடுக்கவே அமெரிக்க மேற்படி பிரேரணையைக் கொண்டுவந்து நிறைவேற்றியது.

0 கருத்துக்கள் :