அவுஸ்திரேலியாவிருந்து எட்டு இலங்கையர்கள் நாடு கடத்தல்

17.11.12

சட்டவிரோதமாக அவுஸ்திரேலிய சென்று எட்டு இலங்கையர்கள் சுயவிருப்பின் அடிப்படையில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். நெளரு முகாமிலிருந்து நேற்றிரவு இவர்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது. அகதிகளின் சுயவிருப்பின் அடிப்படையிலேயே இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது. இலங்கை அகதிகள் தொடர்ந்தும் சுயவிருப்பில் நாடு திரும்ப முன்வருகின்றமை ஆட்கடத்தல்காரர்களை ஊக்குவிக்கவில்லை என்பதை எடுத்துக் காட்டுகிறது என அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த ஒகஸ்ட் மாதத்திற்குப் பின் அவுஸ்திரேலியாவில் இருந்து 332 இலங்கை அகதிகள் நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவுஸ்திரேலியாவில் இருந்து மேலும் சில அதிகள் நாடு திரும்ப விருப்பம் சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா சென்ற நிலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த எட்டு இலங்கையர்கள் மீண்டும் நாடு திரும்ப விருப்பம் வெளியிட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவின் குடிவரவு மற்றும் குடியுரிமை திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. நவுரு தீவில் தங்கியுள்ள 5 பேரும், கிறிஸ்மஸ் தீவில் உள்ள ஐந்து பேருமே இவ்வாறு இலங்கை திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் விரைவில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவர் என்று கூறப்படுகிறது. இதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரையில் 300க்கும் மேற்பட்டவர்கள் அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை;கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

0 கருத்துக்கள் :