யாழ் வல்வையில் புதிய படைமுகாம் அமைக்கும் பணியில் சிறீலங்காப்படையினர்!

19.11.12


விடுதலை புலிகளை அழித்துவிட்டதாக கூறும் சிறிலங்காவும் அதன் படைத்தரப்பும் தமிழர் தாயக பகுதியை ஆக்கிரமித்து அங்காங்கே புதிய படைமுகாம்களை அமைத்து வருவருவது யாவரும் அறிந்த விடயம் அதே போன்று வல்வைச்சந்தியில் புதிய படைமுகாம் ஒன்றினை அமைக்கும் பணியில் சிறீலங்காப்படையினர் ஈடுபட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள். குறித்த பகுதியினை துப்பரவு செய்யும் பணியில் படையினர் ஈடுபட்டுள்ளார்கள். கடந்த சிலநாட்களாக படைஊர்தியில் வந்திறங்கும் படையினர் குறிப்பிட்ட பகுதியில் கனரகவாகனங்களை கொண்டு துப்பரவு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.இந்த பகுதியில் பாரிய படைத்தளம் ஒன்றினை அமைக்கும் பணியில் படையினர் ஈடுபட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள். ஏற்கனவே வடமாரட்சியின் வல்வைபகுதியில் படைமுகாம்ஒன்று அமையப்பெற்றுள்ளதுடன் அதன்ஊடாக செல்லும் வாகனங்கள் பொதுமக்கள் படையினரின் தேவைகளுக்கு ஏற்ப பதிவுகளை மேற்கொண்டுவிட்டே வடமராட்சிக்கு செல்லவேண்டும். இரவுநேரங்களில் இ;ந்த வீதிஊடாக பணிக்கு செல்லும் அனைவரும் படையினரிடம் தங்களை பதிவு செய்துவிட்டு பணிக்கு செல்லவேண்டிய நிலைக்கு தற்போதும் மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். தற்போது இருக்கும் படைமுகாமிற்கு எதிராக பாரிய படைத்தளத்தினை அமைக்கும் நோக்கில் அங்கு நிற்கும் பனைவடலிகள்,சவுக்குமரங்களை படையினர் தறித்து படைமுகாமினை அமைக்கும் பணியில் ஈடுபட்டுவருவதாக மக்கள்தெரிவித்துள்ளார்கள்.

0 கருத்துக்கள் :