5 ரூபாய்க்காக தகராறு விளைவு கத்திக்குத்து

23.11.12

ஐந்து ரூபாய்க்காக நடந்த தகராறில் 22 வயது இளைஞர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார் என்ற செய்தி பலருக்கு ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கும். டெல்லியில் நந்த் நகரி என்ற இடத்தைச் சேர்ந்த ராகுல் (22) என்பவர், செவ்வாய்க்கிழமை இரவு பணி முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது அவருக்கும் அங்கிருந்த சிலருக்கும் இடையில், ஒரு விஷயத்தில் ஐந்து ரூபாய்க்காக தகராறு ஏற்பட்டது. அதில், ஆத்திரமடைந்ததாக கூறப்படும், அடையாளம் தெரியாத நபர் திடீரென்று ராகுலை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டார். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிலர், ராகுலை மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராகுலை குத்திய நபரைத் தேடி வருகிறோம் என்று போலீஸார் கூறினர்.

0 கருத்துக்கள் :