பிரிகேடியர் தமிழ் செல்வன் உட்பட ஏழு மாவீரர்களின் 5ம் ஆண்டு நினைவு நாள் இன்று

2.11.12

02.11.2007 அன்று வீரச்சாவடைந்த தமிழீழ் அரசியல் துறை பொறுப்பாளார் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட ஏழு மாவீரர்களின் 5ம் ஆண்டு நினைவு நாள் இன்று.

கிளிநொச்சியில் அவரது முகாம் மீதுசிறீலங்கா அரச விமானப்படையின் குண்டு வீச்சின் போது 2007 நவம்பர் 2 ஆம் திகதி‌ வீரச்சாவடைந்தார்

பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன். அவருடன் வீரச்சவடைந்த மாவீரர்கள் வருமாறு:
* லெப். கேணல் அன்புமணி அல்லது அலெக்ஸ் என்று அழைக்கப்படும் முத்துக்குமாரு சௌந்தரகிருஸ்ணன் (சொந்த முகவரி யாழ். மாவட்டம்)

* மேஜர் மிகுந்தன் என்று அழைக்கப்படுமம் தர்மராசா விஜயகுமார் (சொந்த முகவரி: யாழ். மாவட்டம்)

* மேஜர் கலையரசன் அல்லது நேதாஜி என்று அழைக்கப்படும் கருணாநிதி வசந்தகுமார் (நிலையான முகவரி: யாழ். மாவட்டம், தற்காலிக முகவரி: ஜெயந்திநகர், கிளிநொச்சி)

* லெப். ஆட்சிவேல் என்று அழைக்கப்படும் பஞ்சாட்சரம் கஜீபன் (யாழ். மாவட்டம்)

* லெப். மாவைக்குமரன் என்று அழைக்கப்படும் முத்துக்குமாருக்குருக்கள் சிறீகாயத்திரிநாத சர்மா
* மேஜர் செல்வம். கண்டாவளை கிளினொச்சி மாவட்டம் .

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம் .

 தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த அனைத்து போராளிகளையும் இன்நாளில் நினவுகூருகிறோம்.
.

0 கருத்துக்கள் :