புலிகளின் கைக்கு சீனாவின் 5 ஆட்டிலறிகள் எப்படி? அதிர்ச்சியில் இராணுவம்

1.11.12

முள்ளிவாய்க்கால் கடற்கரையில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் 5 ஆட்டிலறிகள் சீனாவில் தயாரிக்கப்பட்டவை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது..

நிலம் புயலினால் ஏற்பட்ட மண்அரிப்பை அடுத்து, விடுதலைப் புலிகளால் கரையோரத்தில் புதைத்து வைக்கப்பட்ட 5 ஆட்டிலறிகளை சிறிலங்கா படையினர் நேற்று கைப்பற்றினர்.

இவை அனைத்தும் சீனாவில் தயாரிக்கப்பட்டவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இறுதிப்போரின் போது விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் இந்த ஆட்டிலறிகள் மூன்றரை ஆண்டுகளாக கண்டுபிடிக்கப்படாதது குறித்து சிறிலங்கா இராணுவத்தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது.

போர் முடிவுக்கு வந்த பின்னர், முள்ளிவாய்க்காலில் சிறிலங்கா படையினர் 3 ஆண்டுகளாக தொடர் தேடுதல்களை நடத்தியிருந்தனர்.

நிலம் புயலினால், காட்டிக்கொடுக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ள இந்த ஆட்டிலறிகள் விடுதலைப் புலிகளின் கைக்கு எவ்வாறு கிடைத்தன என்ற விசாரணையை சிறிலங்கா இராணுவத்தரப்பு ஆரம்பித்துள்ளது.

இவை விடுதலைப் புலிகளால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவையா அல்லது சிறிலங்கா இராணுவத்தினரிடம் இருந்து கைப்பற்றப்பட்டவையா என்று கண்டறிய விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதேவேளை, முதல்முறையாக ஒரே தடவையில் விடுதலைப் புலிகளின் 5 ஆட்டிலறிகளை கைப்பற்றியுள்ள சிறிலங்கா இராணுவத்தினர் அந்தப் பகுதியில் தேடுதல்களை தீவிரப்படுத்தியுள்ளதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :