வெலிக்கடைச் சிறைச்சாலை கலவரம். உயிரிழந்தோர் எண்ணிக்கை 27

10.11.12

வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக உயர்வடைந்துள்ளது.

வெலிக்கடை சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஸ்ட ஆலோசகர் எம்.எஸ்.சதீஸ்குமார் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

வெலிக்கடை சிறை மோதலில் பலியானோர் தொகை 16 என முன்னதாக தகவல் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் சிறைச்சாலைக்குள் இருந்து இன்று மேலும் 11 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டார்.

சிறையில் இருந்து பலர் தப்பிச் சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதெனவும் அவர்களை தேடும் பணிகளில் புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, வெலிக்கடை சிறையின் ஆயுத களஞ்சியம் உடைக்கப்பட்டு 84 துப்பாக்கிகள்

0 கருத்துக்கள் :